Tuesday, January 10, 2006

இணைய மையத்தில் தமிழெழுத ஒரு புதிய வழி…

இணைய மையங்களில் எந்த ஒரு செயலியையும் நிறுவாமல் தமிழில் தட்டெழுத ஒரு வழியை உருவாக்கியுள்ளேன்.

http://developer.thamizha.com/tamilkey.html என்ற வலைப்பக்கத்திற்கு சென்று உங்களுக்குத் தெரிந்த விசைப் பலகையை தேர்வு செய்து தட்டெழுதலாம்.

தற்போது அஞ்சல் மற்றும் தமிழ்நெட்99 விசைப்பலகைகளை மட்டும் உருவாக்கியுள்ளேன். தமிழ்தட்டச்சு மற்றும் பாமினி விசைப் பலகைகளை விரைவில் சேர்க்க உள்ளேன்.

http://developer.thamizha.com/tamilkey.html தளத்தை சோதித்து உங்கள் கருத்துக்களை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, November 19, 2005

விண்டோஸ் பயர்பாக்ஸ் உருவாக்கம்...


my-own-firefox-build
Originally uploaded by muguntharaj.
இன்று பயர்பாக்ஸ் மூல நிரலிருந்து விண்டோஸ் கணினியில் புதிய பயர்பாக்ஸை உருவாக்கும் (Build) முயற்சியை செய்துபார்த்தேன்.
நான் இந்த வலைச்சுட்டியிலுள்ள முறையினை அப்படியே பின்பற்றினேன்.
http://gemal.dk/mozilla/build.html

என் ஏர்டெல் 128kbps அகலப்பட்டை இணையத்தொடர்பின் உதிவியுடன் 2 மணிநேரத்தில் மொத்த பயர்பாக்ஸ் மூலநிரலையும் பதிவிறக்கம் செய்தேன்.

மூலநிரலை கம்பைல் செய்து பயர்பாக்ஸ் சொவ்வறை முழுவதும் உருவாக்க மேலும் 2 மணிநேரம் ஆனது.
தற்போது நான் உபயோகிப்பது முற்றிலும் என் கணினியில் உருவான பயர்பாக்ஸ் (பதிப்பு 1.6 a1)....

Saturday, July 09, 2005

தமிழ் லினக்ஸ் பற்றிய நேர்காணல்

இந்த வாரம் ஞாயிறு மாலை சன் நியுஸ் தொலைக்காட்சியில் நமது மாலன் தமிழ் லினக்ஸ் பற்றிய ஒரு நேர்காணலை துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டு நடத்த இருக்கிறார். ஞாயிறு[10/7/2005] மாலை 5.30 மணிக்கு இது ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழ் திறமூல மென்பொருள்களின் இயக்கத்தில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடாமல் பாருங்கள்.

Friday, May 27, 2005

தமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்

நாளை சனிக்கிழமை, 28 மே 2005 அன்று, மாலை 6.00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலைக்கு அருகே தமிழ் மென்பொருள் ஆர்வலர் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ளும் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. [ராதாகிருஷ்ணன் சாலை கடற்கரைச் சாலையுடன் இணையும் இடம். காவல்துறை அலுவலகத்துக்கு எதிர்ப்புறம்.]

நோக்கம்: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினிகளில் (விண் 98, விண் எக்ஸ்பி) தமிழில் படிக்க, எழுத, ஒரு எழுத்துருவிலிருந்து மற்ற எழுத்துருக்களுக்கு மாற்ற, விண் 98ல் முடிந்தவரையில் யூனிகோடுக்கான வசதிகளைச் செய்துதர, அடிப்படைத் தேவையான தமிழ் இடைமுகத்தால் ஆன உலாவி, மின்னஞ்சல், மெஸஞ்சர், ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருள்கள் ஆகிய அனைத்தையும் நிறுவ என்று ஒரு மென்பொருளை உருவாக்குவது. முடிந்தவரையில் திறமூல மென்பொருள்களைப் பயன்படுத்த எண்ணம்.

மிக எளிதாக நிறுவப்படக் கூடிய, தானே நிறுவும் வகையிலான ஒரு மென்பொருளை உருவாக்குவது, எந்த வகையிலும் கணினி அறிவு இல்லாதவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த நிறுவு மென்பொருளை உருவாக்குவது ஆகியவை பற்றி விவாதிப்போம்.

பிற விஷயங்கள்: தமிழ் லினக்ஸ் தற்போதைய நிலை. புதிதாக வரத்தொடங்கும் கணினி போன்ற கருவிகளுக்கு (AMD's PIC, Mobilis etc. from Simputer, Novatium's thin clients etc.) தேவையான தமிழ் ஆதரவு.

கலந்துகொள்பவர்கள்: முகுந்த், நாராயண், பத்ரி.

சென்னையில் இருக்கும், விருப்பமுள்ள தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

Sunday, May 01, 2005

தமிழ் மென்பொருட்கள் போட்டி??

நவன் பகவதியின் பதிவில் வந்த செய்தி

"மைக்ரோஸாஃப்ட் இந்திய மொழிகளில் மென்பொருட்களை உருவாக்குவதற்காக கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஒரு போட்டியினை அறிவித்துள்ளது. பாஷா இந்தியா தளத்தில் இது பற்றிய முழு விபரத்தினையும் காணலாம்.

இந்த அறிவிப்பை பார்த்தவுடன் இது போன்ற ஒரு போட்டியினை திறமூல ஆர்வலர்கள் ஏன் நடத்தக் கூடாது என்று தோன்றியது.

  • மென்பொருட்களை தமிழாக்கம் செய்வது
  • புதிய மென்பொருட்களை உருவாக்குவது
  • தமிழில் உதவி பக்கங்கள் எழுதுவது
  • மென்பொருட்களுக்கான கையேடுகள் எழுதுவது
  • கல்லூரிகளில், பல்கலைக்கழங்களில் தமிழ் மொழியினில் அமைந்த இணையதளம், மாணவர்களுக்கான வலைவாசல்

என்று பல தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தலாம்.

இதனை எடுத்து செல்வதற்கு இந்தியாவில் இருக்கும் குழுக்கள் தயாராக இருந்தால் அவர்களுக்கு என்னாலான பங்களிப்பினை செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

பொதுவாகவே M$ மென்பொருட்களை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நமது பாடத்திட்டங்களின் நடுவே இது போன்ற போட்டிகள் மாணவர்களின் பார்வையினை பிற தொழில் நுட்பங்களின் பக்கம் திருப்ப உதவி செய்யக் கூடும். Any takers?"

இது நல்ல விஷயமாக தெரிகிறது. இதன் மூலம், சிறு சிறு பகுதிகளாக மென்பொருள் உருவாக்குதலை பிரித்து வைத்துக்கொண்டு, இதனை பல்வேறு கல்லூரிகளிடத்தில் கொண்டு செல்லும்போது பயன்கள் கிட்டும் என்று நினைக்கிறேன்.

Thursday, April 28, 2005

தமிழ் பயர்பாக்ஸ் பற்றிய ஒரு முக்கிய தகவல்...

விண்டோஸ் 98 மற்றும் ME கணினிகளை வைத்திருக்கும் நண்பர்கள் பயர்பாக்ஸ் செயலியை பாவிக்கும் போது சில தளங்கள் சரியாகத் தெரியாமல் இருப்பைத கவனித்திருக்கலாம்.
அதற்கு ஒரு தீர்வை Voice on Wings என்பவர் தன் வலைப்பதிவில் கொடுத்துள்ளார்.

பார்க்க:
http://valaipadhivan.blogspot.com/2005/04/windows-98-me-firefox-matter.html

தமிழ் ஒப்பன் ஆபீஸ் மாற்று சேவையகத்தில்...

சிடாக் வெளியிட்ட தமிழ் ஓப்பன் ஆபீஸ் தோகுப்பை விரைந்து தரவிறக்கும் வகையில் மாற்று சேவையகத்தில் நண்பர் வெங்கட் வலையேற்றியுள்ளார்.

மேல் விபரங்களுக்கு பார்க்க அவர் பதிவை: http://www.domesticatedonion.net/blog/index.php?itemid=470

Tuesday, April 26, 2005

தமிழ் திறமூல மென்பொருட்கள் பற்றிய கூட்டுப்பதிவு.

தமிழ் திறமூல மென்பொருட்கள் பற்றிய கூட்டுப்பதிவு. இது சோதனைக்கு