Sunday, May 01, 2005

தமிழ் மென்பொருட்கள் போட்டி??

நவன் பகவதியின் பதிவில் வந்த செய்தி

"மைக்ரோஸாஃப்ட் இந்திய மொழிகளில் மென்பொருட்களை உருவாக்குவதற்காக கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஒரு போட்டியினை அறிவித்துள்ளது. பாஷா இந்தியா தளத்தில் இது பற்றிய முழு விபரத்தினையும் காணலாம்.

இந்த அறிவிப்பை பார்த்தவுடன் இது போன்ற ஒரு போட்டியினை திறமூல ஆர்வலர்கள் ஏன் நடத்தக் கூடாது என்று தோன்றியது.

  • மென்பொருட்களை தமிழாக்கம் செய்வது
  • புதிய மென்பொருட்களை உருவாக்குவது
  • தமிழில் உதவி பக்கங்கள் எழுதுவது
  • மென்பொருட்களுக்கான கையேடுகள் எழுதுவது
  • கல்லூரிகளில், பல்கலைக்கழங்களில் தமிழ் மொழியினில் அமைந்த இணையதளம், மாணவர்களுக்கான வலைவாசல்

என்று பல தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தலாம்.

இதனை எடுத்து செல்வதற்கு இந்தியாவில் இருக்கும் குழுக்கள் தயாராக இருந்தால் அவர்களுக்கு என்னாலான பங்களிப்பினை செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

பொதுவாகவே M$ மென்பொருட்களை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நமது பாடத்திட்டங்களின் நடுவே இது போன்ற போட்டிகள் மாணவர்களின் பார்வையினை பிற தொழில் நுட்பங்களின் பக்கம் திருப்ப உதவி செய்யக் கூடும். Any takers?"

இது நல்ல விஷயமாக தெரிகிறது. இதன் மூலம், சிறு சிறு பகுதிகளாக மென்பொருள் உருவாக்குதலை பிரித்து வைத்துக்கொண்டு, இதனை பல்வேறு கல்லூரிகளிடத்தில் கொண்டு செல்லும்போது பயன்கள் கிட்டும் என்று நினைக்கிறேன்.

4 Comments:

Blogger Jafar ali said...

good!

1:41 AM  
Blogger மு. மயூரன் said...

வாழ்த்துக்கள்.

இப்படி ஒரு கூட்டு வலைப்பதிவு என் நீண்ட நாள் கனவு.

பலகாலமாக தமிழ் மணத்திலிருந்து ஒதுங்கியிருந்ததால் உடனேயே வாழ்த்த முடியவில்லை.

நிறைய செய்யுங்கள்.

இந்த முயற்சி நிச்சயமாக நிறைய பயனுள்ளதாக அமையும்.

2:16 AM  
Blogger மு. மயூரன் said...

என்னுடைய பழைய பதிவு ஒன்று.

http://mauran.blogspot.com/2005/01/blog-post_19.html

2:18 AM  
Blogger Muthu said...

மக்கள் சக்தி மென்பொருள் துறையில் தமிழுக்கு அதிகமாகவே இருக்கிறது. சரியானபடி வழிகாட்டி, ஒருங்கிணைத்துச் செல்லும் அமைப்பு இல்லாததுதான் குறையே.

10:24 AM  

Post a Comment

<< Home